மலத்தை அடக்காதீங்க....!?

மலத்தை  அடக்காதீங்க....!?

மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடக்கும் விடயமாகும்.

அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தால் பலரும் அதை அடக்கி வைத்து கொள்வார்கள்.

மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி மலம் கழித்தலை அடக்கினால் நிறைய வயிற்று கோளாறுகள் வரும்.

மலம் கழித்தலை ஆறு மணி அடக்கி வைத்தால் அது மலச்சிக்கலாக மாற நேரிடும். எனவே அடிக்கடி அப்படி அடக்கி வைப்பதை தவிருங்கள்.

12 மணி நேரம் அடக்கி வைக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகி விடும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம், வலி மற்றும் பைல்ஸ் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

நீங்கள் தொடர்ச்சியாக மலம் கழித்தலை அடக்கி வைக்கும் போது மலமிளக்கிகளை பயன்படுத்தி எளிதாக வெளியேற்ற முற்படலாம். அதுவும் தோல்வியடைந்தால் செயல்முறை நீக்கம் மூலம் வெளியேற்றலாம்.