ராமநாதபுரம் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ராமநாதபுரம் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப் - 19 தேதி அன்று நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது இன்று காலை சரியாக 10 மணியளவில் ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் 33 பேர்களுக்கு பதவி ஏற்பு விழா நகராட்சி கமிஷனர்சந்திரா தலைமையில் நடைபெற்றது. 33 புதிய நகராட்சி உறுப்பினர்களுக்கும் நகராட்சி கமிஷனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு