வேலூரில் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்களின் மிக முக்கியமான அவசர ஆலோசனை கூட்டம்...

 வேலூரில் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்களின் மிக முக்கியமான அவசர ஆலோசனை கூட்டம்...

 மதிப்பிற்குரிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட அனைத்து சங்கத்தின் பொறுப்பாளர்,மற்றும் அனைத்து நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை,சிபிஎஸ்இ,ஐசிஐசி பள்ளி தாளாளர்களுக்கும் இனிய  வணக்கம். நம் சங்கத்தின் சிறப்பு அவசரக் கூட்டம் நம் மாநில பொதுச் செயலாளர் முனைவர் திருமிகு கே.ஆர்.நந்தகுமார் அவர்கள் தலைமையில் காட்பாடி,காந்திநகரில் உள்ள ரங்காலயா ராயல் ஓட்டலில் ,06.03.22,ஞாயிற்றுக்கிழமைய மாலை 3.00 மணியளவில் மாநில அமைப்புச் செயலாளர் கே.தெய்வசிகாமணி முன்னிலையில் நடைபெற இருப்பதால் அனைத்து தாளாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

கூட்டத்தின் நோக்கம் வாகனங்கள் வரி , பள்ளிகள் அங்கீகாரம்.ESI ,fees committee21-22 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதை பற்றிய சிஇஓ அலுவலகத்தின் logic இல்லாத  கட்டளைகள், வரவு செலவுகள் ஏதும் சரியாக இல்லாத காலமாகிய 21-22 கல்வியாண்டிற்கு மிகவும் குறைவாக கட்டணம் நிர்ணயிக்க துடிக்கும் அரசு,அதன் மூலம் RTE பணம் குறைத்துக்கொடுக்க திட்மிடும் அரசு, எத்தனை   கூட்டங்கள் போட்டாலும் கலந்துகொள்ளாமல் ,சந்தாவும் கட்டாமல்,யாரோ கட்டிய சந்தாவை செலவுசெய்து கிடைக்கும் சலுகைகளை சத்தமில்லாமல்  அனுபவிக்கும் தாளாளர்கள் பற்றிய கருத்துக்கள்,  பள்ளிக்கட்டணம் கட்டாத மாணவர்களை எப்படி நடத்தக்கூடாது என்று இன்றைய தினம் மதிப்பிற்குரிய மெட்ரிக் பள்ளி இயக்குனரின் டி வி FLASH. நியூஸ்,சொத்து வரி கட்டச்சொல்லி பஞ்சாயத்துகளில் கெடுபிடிகள், டிரஸ்ட் பதிவுகள்,பள்ளி நிலம் பற்றிய வருவய்த்துறையின் கட்டளைகள் ,'D',Licence பெற முடியாது என்ற மிரட்டல், ஒவ்வொரு ஆண்டும் தொடர் அங்கீகாரத்திற்காக அலையும்  அவல நிலை. பள்ளிக்கட்டணம் கட்டாத பெற்றோர்கள், சம்பளம் சரியாக தரவில்லை என்று அரசிடம் பெட்டிஷன் தரும் ஆசிரியர்கள்,,மற்றும் நிறைய விஷயங்கள் கலந்து  அவசரமாக விவாதிக்க உங்களுடைய கருத்துக்கள் கேட்டு நல்ல முடிவெடுக்க அவசியம் தவறாமல் கலந்து கொள்ள அனைவரும் திரளாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .அனைத்தும் சிறப்பாக அமைய மாவட்ட தலைவர் செயலாளர் , மற்றும் பொறுப்பாளர்கள் பொறுப்பெடுத்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .