அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்...? பாதுகாப்பு வேண்டி ஆசிரியர்கள் போராட்டம்...!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்...? பாதுகாப்பு வேண்டி ஆசிரியர்கள் போராட்டம்...!

தேனி மாவட்டம் ஆசிரியர்களை அடித்தும், அரிவாளுடன் வந்து கொலை மிரட்டல் விடும் மற்றொரு பள்ளியில் கிண்டல் கேலி செய்வதும் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவர்களின் செயல்களை, கண்டித்து இன்று மாலை தேனி முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் பெருந்திரளான முறையீடு.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக இன்று மாலை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் துரைபாண்டி தலைமையில் பெருந்திரளான முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ படிக்கும் மாணவன், ஆசிரியர் ஏன் பாடப்புத்தகத்தை எடுத்து வரவில்லை என்று மாணவனிடம் கேட்டதற்கு, மாணவன் ஆசிரியர் கன்னத்தில் அடித்த சம்பவத்தை கண்டித்தும் நேற்று தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் அரிவாளுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டி விட்டுச் சென்றவரை பெரியகுளம் டிஎஸ்பி நேரில் விசாரித்தும், தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை கண்டித்தும், கல்லுப்பட்டி கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவத்தை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிட கோரி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

:இன்னும் அரசு பள்ளி மாணவர்களை கொஞ்சிக் கொண்டும் சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டும் இருந்தால் இப்படியான மாணவர்களைத்தான் உருவாக்கிட முடியும்.

தனியார் பள்ளிகளுக்கு சலுகை அளித்து பாருங்கள், மாணவர் சமுதாயம் மட்டுமல்ல தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை அடைவதைக் காண்பீர்கள்.