கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவராக பரிதாநவாப் பதவியேற்பு

கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவராக  பரிதாநவாப் பதவியேற்பு

கிருஷ்ணகிரியில் நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிதாநவாப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் இன்று நகர் மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது திமுக சார்பில் பரிதா நவாப்பும்

அதிமுக சார்பில் காயத்ரி தங்கமுத்தும்.போட்டியிட்டனர்.

இதில் திமுகவைச் சார்ந்த பரிதாநாவப்

26- -வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட காயத்ரி தங்கமுத்து ஏழு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இதையடுத்து நகர்மன்ற ஆணையாளர் முருகேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் பரிதா நவாபை வரவேற்று மாலை அணிவித்தனர் இந்த விழாவில்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன்.மற்றும் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி