பாத வெடிப்பு : செலவில்லாமல் சரி செய்யலாம்...?!

பாத வெடிப்பு : செலவில்லாமல் 

 சரி செய்யலாம்...?!




பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்புதானே (cracked heels) என்று விட்டுவிடக் கூடாது.


குறிப்பாக பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த பாத வெடிப்பு (cracked heels) புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் அதிக வலியை தரும்.

இந்த பாத வெடிப்பு (cracked heels) மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்பு உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.

இந்த பாத வெடிப்பு குணமாக வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும், நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு இயற்கை கிரீம் (foot crack cream) தயாரிக்கலாம் வாங்க
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுண்ணாம்பு மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் கிரீம் (foot crack cream) தயார். தேங்காய் எண்ணெய்க்கு பதில் விளக்கெண்ணெய் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
பாத வெடிப்பு குணமாக: தினமும் இரவு தூங்குவதற்கு முன், கால்களை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரஷை பயன்படுத்தி கால்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு, பின்பு இந்த கிரீமை (foot crack cream) பாத வெடிப்பு (cracked heels) உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து, பின்பு மறுநாள் காலை எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை செய்து வர கால்களில் உள்ள பாத வெடிப்புகள் மறைந்து விடும். பாத வெடிப்பு குணமாக இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..!