காமராஜர் பெயரில் அரசு கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம் : முதல்வருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நன்றி!!

 காமராஜர் பெயரில் அரசு கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம் : முதல்வருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நன்றி!!


பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ரூ.1000 கோடி செலவில் அரசு கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்வி மேம்பாட்டுக்கு சில முக்கியத் திட்டங்களை அறிவித்தார்.

அதில் ஒன்று, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளை மேம்படுத்தும் திட்டம்.

இந்தத் திட்டத்துக்கு, ‘பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்லூரிகள் மேம்பாட்டு திட்டம்’ என்று, முதல்-அமைச்சர் சூட்டி இருப்பதாக அமைச்சர் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். நம் தமிழ்நாட்டில் கல்வியை கிராமங்களின் கடைகோடி வரையிலும் கொண்டுபோய் சேர்த்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

அந்த ஒப்பற்றத் தலைவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இப்போது பெருமைப்படுத்தி இருப்பதை வரவேற்கிறேன். அரசின் அறிவிப்புக்கும், முதல்&அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மாவட்ட செய்தியாளர் இளையராஜா