பர்கூரையடுத்த அத்திகானூரில் எருது விடும் திருவிழா

 பர்கூரையடுத்த அத்திகானூரில் எருது விடும் திருவிழா


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்த அத்திகானூரில்எருதுவிடும் திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திகானூர் கிராமத்தில் 69வது ஆண்டு எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது

ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன்   பங்கேற்று எருதுவிடும் விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஓசூர் சூளகிரி கிருஷ்ணகிரி ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது .

விழாக்குழுவினர் நினைத்திருந்த தூரத்தை குறைவான நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது முதல் பரிசாக ஒரு லட்சத்து 25-ஆயிரமும். இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் மூன்றாம் பரிசாக 80 ஆயிரமென-நாற்பத்தி எட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவை காண பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி