தனியார் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் மட்டும் கேட்கக்கூடாது...! ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டும்...!! என்ன ஒரு முரண்பாடு...?

தனியார் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் மட்டும் கேட்கக்கூடாது...! ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டும்...!! என்ன ஒரு முரண்பாடு...?

1) உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்துங்கள் !

இல்லையெனில் நடவடிக்கை.

2) ஆசிரியர்களுக்கு சம்பளம் போட்ட வங்கி EC transferஜ உடனே காண்பியுங்கள், இல்லையேல் நடவடிக்கை.

3. ஓடாத பள்ளி வாகனங்களுக்கு FC, Road Tax, Insurance செலுத்துங்கள், இல்லையேல் நடவடிக்கை.

4) வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய EMIகளை காலத்தே செலுத்துங்கள், இல்லையேல் நடவடிக்கை.

5) மாணவர்களுக்கான பாட புத்தகங்களை, அரசு கோடவுனில் இருந்து, online மூலம் ஆர்டர் செய்து, online ல் பணம் செலுத்தி *கோடவுன் கீப்பர்களுக்கு லஞ்சம் கொடுத்து* ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி, வண்டி வாடகை கொடுத்து எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுங்கள், மாணவர்களிடம் பணம் வசூலிக்காதீர்கள். அவர்கள் மணம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள்.

6) Sanitary certificate வாங்க challan, onlineல் பணம் செலுத்தி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முறைப்படி செய்து, கொடுக்க வேண்டிய வர்களுக்கு கொடுத்து விடுங்கள்.

7) தீ தடுப்பு உபகரணங்களை முறைப்படி சர்வீஸ் செய்து, கேட்கும் அனைத்துவிதமான விபரங்களையும், கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள்.

8) பள்ளிக்கு வருபவர்களை, அரசு அதிகாரிகளை, மனம் நோகாது கவனியுங்கள்.  கட்ட வேண்டியவற்றை, கொடுக்க வேண்டியவற்றை மறக்காமல் மறுக்காமல் செலுத்துங்கள். கொடுங்கள்.

*ஆனால்*

பெற்றோர்களே, தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்த வேண்டயதில்லை. கேட்டால் *புகார் அளிப்பார்ஙகள்*.

கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் கேட்கக்கூடாது என கூறும், அரசு. 

கட்டணம் செலுத்தாத மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு பதிலாக அரசே, பள்ளிகளுக்கு கொடுக்கலாமே !

சினிமா தியேட்டரில் கட்டணமின்றி பார்க்கவியலாது என்பதுடன். தியேட்டரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையைக்கூட நிர்ணயம் செய்ய முடியாத/ இயலாத அரசுகள், கல்வி கட்டணத்தை மட்டும், எந்தவித நியாயமும் நீதியும் நேர்மையும் இன்றி மிகமிக குறைவாக வசூலிக்க வேண்டும் என கோருவது எப்படி ?

அதையும் கேட்கக்கூடாது என G.O. போடுவதெப்படி.

ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!