மஹாசிவராத்திரி தேரோட்டம் கோலாகலம்!

 மஹாசிவராத்திரி தேரோட்டம்         கோலாகலம்!

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் மக்களுக்கு புராதனமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் 109ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.20.2.22  அன்று முதல் ஸ்ரீ மகா கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், அம்பாள் அபிஷேகம், காப்புக்கட்டுதல், தீபாராதனை, கொடியேற்றம், உள்ளிட்ட 6.3.22 ஞாயிறு வரை உற்சவ விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.            ஸ்ரீ அம்பாள் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. தேர் சுற்றி வரும் போது கேரள செண்டை மேளம், டிரம்செட், கடைக்கால், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.இந்த தேரோட்டம் நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையினர் செய்திருந்தார்கள். தேர் செல்லும் வழிநெடுகிலும் குளிர்பானங்கள், நீர் மோர் பொதுமக்களால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது ஆயிரவைசிய சபையின் சார்பில் தலைவர் மோகன் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு