கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம் மார்ச் - 12
ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிராமத்தில் மாவட்ட கால்நடை துறை மற்றும் பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாடு,ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி மாடுகளுக்கு சினை பரிசோதனை,மற்றும் செயற்கை கருவூட்டல், கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், பொது மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாலாந்தரவை கால்நடை உதவி மருத்துவர் முஹம்மது நிஜாம் தலைமையில் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் சிராஜ்தீன் உபதலைவர் எம். ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் புதுவலசை தர்ம பரிபாலன சபை உபதலைவர் ஏ. முஹம்மது களஞ்சியம், பனைக்குளம் முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி முஹம்மது இக்பால், பனைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காஞ்சியம் மற்றும் கால்நடை வளர்ப்போர் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் ஏராளமான ஆடு,மாடு, கோழிகளை வளர்ப்போர்கள் கொண்டு வந்து பரிசோதனை செய்துகொண்டனர்.இதில் கால்நடை உதவியாளர்கள், மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு