தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் கே. என். நேரு செய்த வேலையை பாருங்க...?!
தி.மு.க. மூத்த அமைச்சரான கே.என். நேரு -பங்காரு அடிகளார் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பை மையமாக வைத்து நெட்டிசன்கள் திமுகவை ஒருபக்கம் வறுத்தெடுத்து வர, மறுபக்கம் திமுக எம்பியான செந்தில்குமார் இந்த விஷயத்தில் அமைச்சருக்கு அட்வைஸ் செய்துள்ளதால் நேரு மீது ஸ்டாலின் செம அட்செட்டில் உள்ளாராம்.
பெரியாரின் கொள்கையை பின்பற்றி வளர்ந்த கட்சி என்பதால் திமுகவினர் யாராவது கோயிலுக்கு சென்றாலோ, ஆன்மிக குருக்களை சந்தித்தாலோ அது கடுமையாக விமர்சிக்கப்படுவதுடன், கேலியும் பேசப்படுவது வழக்கம்.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி கனிமொழி என கருணாநிதி குடும்பத்தினர் கோயிலுக்கு செல்லும்போது அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் கூடுதலாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி கனிமொழி என கருணாநிதி குடும்பத்தினர் கோயிலுக்கு செல்லும்போது அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் கூடுதலாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் கேலி பொருளாகவும் ஆகிறது. அப்போதெல்லாம கோயிலுக்கு போவது, இறைவனை வழிபடுவதெல்லாம் தனிமனித சுதந்திரம் என்று உடன்பிறப்புகள் நாசூ்ககாக சமாளிப்பார்கள்.
திமுகவுக்கு அப்படியொரு சம்பவம்தான் தற்போதும் நேர்ந்துள்ளது. ஆனால் இந்த நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளவர் மூத்த அமைச்சர் கே.என்.நேரு.
திமுகவுக்கு அப்படியொரு சம்பவம்தான் தற்போதும் நேர்ந்துள்ளது. ஆனால் இந்த நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளவர் மூத்த அமைச்சர் கே.என்.நேரு.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குருவான பங்காரு அடிகளாரை, அமைச்சர் கே என் நேரு நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக தகவல் வெளியாகியது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர், தன் அருகில் சோபா இருந்தும் அடிகளாரின் முன் தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் தான் சர்ச்சைக்கு காரணம்.
இந்த புகைப்படம் நெட்டிசன் கண்களுக்கு பட்டதுதான் தாமதம்... ஆஹா சன்டேயும் அதுவுமா செம கன்டென்ட் கிடைச்சிடுச்சு என்று அமைச்சர் கே.என்.நேருவையும், திமுகவையும் வெச்சு செய்து வருகின்றனர். அமைச்சர் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பங்காரு அடிகளார் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால், இவரின் ஆதரவாளர்கள், பக்தர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதாலும் இவர்கள் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இதுவே நேரு சந்தித்த ஆன்மீகவாதி ஒரு பிராமின் ஆக இருந்தால் இதன் கதையை வேறாக இருந்திருக்கும்?!