புதிய கல்விக் கொள்கையின் இன்னொரு அம்சம்: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அறிமுகம்...

புதிய கல்விக் கொள்கையின் இன்னொரு அம்சம்:  தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அறிமுகம்...!

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்.

அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்படும். விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்...

தமிழகத்தில் பாஜகவை உள்ளே விட மாட்டோம் பாஜக அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையை எந்த வழியிலும் அறிமுகூறிவிட்டு மாட்டோம்  என்று கூறிவிட்டு புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவத்திலும்  அமல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

எதற்கு இந்த வெளி வேஷம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.  மத்திய அரசின் நிதி வேண்டும் என்பதற்காகவா...?  இல்லை உண்மையிலேயே புதிய கல்விக் கொள்கை மிக அழகாக இருக்கிறது என்பதற்காகவா....?

 முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு....?  தமிழக அரசு இனியாவது ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.