முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன்...விலை எவ்வளவு தெரியுமா?

 முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன்...விலை எவ்வளவு தெரியுமா?

முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகம் 336 பக்கங்களைக் கொண்டது. விலை 500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய 'உங்களில் ஒருவன்' (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார்.
இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

பூம்புகார் பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள 'சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் விழாவில் ஏற்புரை நிகழ்த்தினார். 336 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தின் விலை 500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.