சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 60 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை see

சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 60 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை

மார்ச் 18-ஆம் தேதி ஓசூர் மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் சமேத சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர்பேட்டையில் உள்ள சாலைகளை புதிதாக அமைக்கும் பணி ரூ.60.00லட்சம் மதிப்பீட்டில் ஓசூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது*

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் தேர் திருவிழா நடைபெற உள்ளது அதை முன்னிட்டு ஓசூர் தேர்பேட்டையில் உள்ள சாலையை சுமார் ரூபாய் 60 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேர்கொள்ளப்பட்டது

இந்த பணியை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் S.A.சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், மாநகர பொறியாளர் ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் என். எஸ். மாதேஸ்வரன், எம்.நாகராஜ், கிருஷ்ணவேணி ராஜீ உள்ளிட்டோரும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர் ; E.V. பழனியப்பன்