ரூபாய் 32.5 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கேபி முனுசாமி திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ரூபாய் 32.5 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி அவர்கள் கல்வெட்டை திறந்து வைத்தும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்
முன்னதாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்கள் கட்டடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட கால்வேஅள்ளி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 32.5 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சமையலறை கூடம் மற்றும் காளிகொட்டாய் பகுதியில் சிறிய பாலம் உள்ளிட்ட பணிகளுக்கு மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் (NRGS) கடந்த 2019-20 நிதி ஆண்டில் அதிமுக அரசால் பணிகள் தொடங்கப்பட்டது,
தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி அவர்கள் முன்னிலையில் திறப்பு விழா காணப்பட்டது, இதில் கேபி முனுசாமி அவர்கள் கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தும் குத்து விளக்கு ஏற்றியும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் முன்னதாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே அசோக்குமார் அவர்கள் புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிஜெயகுமார் மற்றும் துணைத் தலைவர் மஞ்சுளாகோவிந்தராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர் மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு KPM சதீஷ்குமார் காவேரிபட்டினம் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதாகேசவன், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட எம்ஜிஆர் மன்றம் ஆறுமுகம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி