தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 25% சதவீத கட்டண பாக்கியை உடனே வழங்கு....! தமிழக அரசுக்கு நந்தகுமார் கோரிக்கை....!!
இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டணத்தை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறது இதை மாநில அரசு பள்ளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்.
இதன்படி 2014 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அதற்கான கட்டணம் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு நந்தகுமார் தலைமையிலான தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனியார் பள்ளிகளின் கஷ்டத்தை உணர்ந்து மேற்கண்ட தொகையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு 2018 - 19 மற்றும் 2019 - 20 காண கல்விக் கட்டணத்தை எடப்பாடி அரசு விடுவித்துக் கொடுத்தது .
அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் அந்தந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை அந்தந்த ஆண்டு வழங்க வேண்டும் என்றும் இதில் எவ்வித காலதாமதம் செய்யக்கூடாது. இனி வரும் காலங்களில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஜூன் மாதம் 50% டிசம்பரில் 25% மார்ச், ஏப்ரலில் 25% அந்த ஆண்டுக்குள்ளேயே வழங்கி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.
அதுமட்டுமன்றி இவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது எனவே இந்த கட்டணத்தை முறைப்படுத்தி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
ஆனால் தமிழக அரசு இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை நீதிமன்றம் சொன்ன கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது இதில் கூட ஏகப்பட்ட குளறுபடிகள்.
இந்தக் கட்டணம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு மிகக் குறைவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை முறை படுத்துவதற்காக பள்ளிக் கல்வி செயலாளர் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அதை வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்திருந்தார்.
இது கூட எப்படி வழங்கப்பட்டது என்று சொன்னாள் கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்திற்கும் பள்ளிக்கல்வி செயலாளர் நிர்ணயித்த கட்டணத்திற்கும் இதில் எது மிக குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகையை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
பள்ளிகளுக்குள் இந்த பாகுபாடு இருக்கக்கூடாது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்கு அரசு எவ்வளவு செலவிடுகிறதோ அந்த தொகையை RTE மாணவனுக்கும் வழங்க வேண்டும் என்று நந்தகுமார் தலைமையிலான சங்கம் தொடர்ந்து பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகளை நசுக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அதுவும் இந்த ஆண்டு ஒரு படி மேலே போய் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டண நிர்ணய குழு கட்டணத்தை நிர்ணயம் செய்யாத நிலையில் 2017 18 நிர்ணயம் செய்த கட்டணத்தை வைத்தேே Re embosement விண்ணப்பித்திருந்த நிலையில் அதைக்கூட முறையாக வழங்காமல் நீதிமன்றம் இந்த ஆண்டு பள்ளிக் கட்டணம் 75% வசூலிக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறி 25 சதவீதத்தை வழங்காமல் ஏமாற்றி உள்ளது.
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய முழு தொகையும் வழங்கி இருக்கும் நிலையில் தமிழக அரசு வேண்டுமென்றே தனியார் பள்ளிகளை வஞ்சிக்கும் நோக்கோடு 25 சதவீத கட்டணத்தை வழங்காமல் ஏமாற்றி இருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.
கட்டண நிர்ணய குழு சரியாக, முறையாக கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தாலும் கூட ஆண்டுக்கு 10% 20% என்று உயர்ந்து 30 சதவீதத்திற்கு அதிகமான கட்டணம் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்திருக்கும்.
கட்டண நிர்ணயக் குழு முறையாக இதை செய்யாத இந்த கடுமையான சூழ்நிலையில் தமிழக அரசு முறையாக தரவேண்டிய 100 சதவீத கட்டணத்தில் 25 சதவீத கட்டணத்தை பிடித்துக்கொண்டு 75% மட்டும் கொடுத்திருப்பது தனியார் பள்ளிகளுக்கு இழைத்இருக்கும் மிகப்பெரிய அநீதியாகும்.
18 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எலி மருந்து சாப்பிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்களை திரும்பி பார்க்க ஆளில்லை. பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி நிர்வாகிகளை இந்த அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை.
மாறாக தனியார் பள்ளிகளை மேலும் நசுக்கும் விதமாக TC வாங்காதே, கல்விக்கட்டணம் செலுத்தாதே என்று பெற்றோர்களுக்கும் ஏமாற்று வித்தைகளை கற்றுக்கொடுத்து மாணவர்களின் EMIS நம்பரை திருடி அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழகத்தின் தரமான கல்வியைக் கொடுத்து விட்டார்கள் .
இந்த பிரச்சனையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது தனியார் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் படும் கஷ்டம் இந்த அரசுக்கு தெரியும் உரிய நேரத்தில் உதவி செய்வோம் என்று கூறினார்களே தவிர ஒரு உதவியும் செய்யவில்லை.
அள்ளிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு துளி கூட கிள்ளி கூட கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய பணத்தில் 25 சதவீதத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்.
அரவாணிகளை கூட அன்போடு கவனித்த இந்த அரசு ஆசிரியர்களை கைவிட்டது உண்மையான கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டண பாக்கி 25 சதவிகிதத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுவரை இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் முறையிட்டாவது இந்த கட்டணத்தை பெற்றுத் தருவோம் என்று தனியார் பள்ளிகளில் ஒப்பற்ற தலைவர் நந்தகுமார் தலைமையிலான சங்கம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழகஅரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பாவது இந்த கட்டணத்தை வழங்குமா? இல்லை நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு உள் ஆகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்..!