கோடை காலத்திற்கு முன்பாகவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உறுதி

கோடை காலத்திற்கு முன்பாகவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உறுதி

கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதாகபொதுமக்களுக்கு  பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்தெவித்தார்.

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் கந்திகுப்பம் அருகே,சொக்கனூர் மற்றும்  சின்னமட்டபள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள். வெளிச்சம் தனியார் தொண்டு நிறுவனத்தால் புதுபிக்க்கப்பட்டு,அதன் திறப்பு விழாவிற்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது கொக்கனூர் கிராமப்பகுதி பொதுமக்கள்கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும் எனவும் அதேபோல் வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்

இதையடுத்துபொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதியான முதியோர்களுக்கு உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும்  பொதுமக்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரின் கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மதியழகனுக்கு நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் மூர்த்தி