உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவையில் நாம் என்னதான் நிலம் மற்றும் வீட்டுமனை அளக்க மனு கொடுத்தால் ஒரு மாதத்துக்குள் அளக்க வேண்டும் இல்லையேனில் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டன ஆனால் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதுவும் குறிப்பாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது....

நான் டிசம்பர் 3 அன்று மனு கொடுத்தேன் இன்று  பிப்ரவரி 24ஆகுது இன்னும் வீட்டு மனை அளக்க வரவில்லை எந்த மாற்றமும் இல்லை நேரில் சென்று கேட்டால் அடுத்த வாரம் வருகிறேன் வரும் போது call pantran னு சொல்றாங்க ஆனால் எந்த சரியான தகவலும் சொல்லவில்லை  எங்களை போன்ற ஏழைகளுக்கு ஏமாற்றமும் நேரமும் மீஞ்சுகிறது......

     இங்கு பணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே  அரசு பணியாளர்கள் அடிபணிவதும் அரவனைப்பதும் எங்களை போன்றவர்களுக்கு "'''ஏழை""""என்ற அடையாளத்தை சுட்டிகாட்டுகிறார்கள்

   சமூக அக்கரை இருந்தால் மட்டும் பகிருங்கள் நண்பர்களே....

     இப்படிக்கு

  தமிழ்நாடு இயற்கை விவசாயம்   மற்றும் விவசாயிகள்  நலச்சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்