ராமநாதபுரம் நகர சபையை அஇஅதிமுக கைப்பற்றும்

ராமநாதபுரம் நகர சபையை அஇஅதிமுக கைப்பற்றும்

ராமநாதபுரம் பிப்-09

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் நகர் மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட  வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பின் வேட்புமனுக்களை முன்னாள் அமைச்சர் மருத்துவர். மணிகண்டன்  தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்பொழுது மருத்துவரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் பேட்டி அளித்தபோது:- ராமநாதபுரம் நகரில் மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தார் சாலைகள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு தார் சாலைகள் அமைத்து தந்திருக்கிறோம். குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம், குடிமராமத்து திட்டத்தில் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு தண்ணீரை தேக்கி மக்களுக்கு வழங்கினோம். அதுமட்டுமல்ல சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி இவைகளை நான் அமைச்சராக இருந்த போது 

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இவைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வாக்குகள் கேட்போம், இதனால் ராமநாதபுரம் நகர சபையை அஇஅதிமுக கைப்பற்றும் என்று அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு