முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் பிப்-28

ராமநாதபுரம் மாவட்டம் அஇ அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மண்டபம் ஒன்றிய செயலாளர் (மேற்கு) ஆர். ஜி. மருதுபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் ஜானகிராமன் (கிழக்கு) நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது. இதில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா உள்ளிட்போர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு