மோடி மீதான மக்கள் அன்பு அதிகரித்துள்ளது: அமித் ஷா

மோடி மீதான மக்கள் அன்பு அதிகரித்துள்ளது: அமித் ஷா


கடந்த 2013ம் ஆண்டில் இருந்ததை விட பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு அன்பும் ஆதரவும் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித் ஷா  நெட்வொர்க் 18 குழுமத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோசியின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அப்போது, கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்ததை விட மக்களிடையே  நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யோகி  ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேச அரசு மக்களின் மனங்களை வென்றுள்ளதாகவும், தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக, “ உத்தரப் பிரதேசத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டன, மற்றவை உள்ளன. உ.பி.யின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் ஜன் விஸ்வாஸ் யாத்ரா மற்றும் விஜய் சங்கல்ப் யாத்ராக்களை நடத்தியுள்ளேன். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்தியுள்ளேன். உத்தரபிரதேசத்தில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மக்கள் மனதில் இடம்பிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 2013 டிசம்பரில் இருந்ததை விட இன்று பிரதமருக்கான ஆதரவும் அன்பும் மிக அதிகமாக உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும்” என்று அமித் ஷா கூறினார்.