கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் யார்.....? டெல்லிக்கு கடத்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள்....!!

 கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் யார்.....?  டெல்லிக்கு கடத்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள்....!!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சியில் முப்பத்திமூன்று நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இதில் திமுகவை சேர்ந்த 21 நகர்மன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் 5 பேரும் சுயேச்சையாக ஐந்து பேரும்.காங்கிரஸ் கட்சிக்கு ஒருவரும்.பிஜேபி கட்சி சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முடிவுகள் வெளிவந்த உடனேயேகிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமையில் 3 சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து திமுகவிற்கு பலம் 25 நகர்மன்ற உறுப்பினர்களாக ஆனது.

ஆளுங்கட்சியான திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக நகர செயலாளர் நவாபின் மனைவி பரிதா. மாவட்ட துணை தலைவர் கடலரசு சேகரின் மனைவி சாவித்திரியும் மாவட்ட திமுக இலக்கிய அணியின்தலைவர் அஸ்லாம்  மனைவியும் என மும்முனை போட்டி நிலவுகிறது.

இதனால் பயந்து போன பரிதாநவாப் பத்தொன்பதாம் தேதியே வெற்றிபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் இருபத்தி நான்கு பேரை ஆர்.கே.வி. ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார்.

இதையடுத்து அனைவரும் ஏற்காடு க்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பெங்களூர் அழைத்துச் சென்று விமானம் மூலமாக டெல்லி சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அனைவருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக விருந்து. ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அறை.  என பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறார் பரிதா நவாப்.

இறுதி வெற்றி அவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. திமுக தலைமையும் இவருக்கு சிக்னல் காட்டியதாக தெரிகிறது. எனவே கிருஷ்ணகிரி நகர மன்றத்தின் தலைவராக இரண்டாவது முறை பதவி ஏற்கப் போகிறார் பரிதா நவாப்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி