உயிரோடு இருக்கும் தன் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்று வீட்டைஇடித்து தரைமட்டம

 உயிரோடு இருக்கும் தன் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்று வீட்டைஇடித்து தரைமட்டம

கிருஷ்ணகிரி அருகேஉயிரோடு இருக்கும் தன் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்று தன் வீட்டை பத்திர பதிவு செய்துஜேசிபி எந்திரங்களை வைத்து  வீட்டைஇடித்து தரைமட்டமாக்கியதாககூலித்தொழிலாளிபுகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே கே ஆர் பி அணை இணைப்புச் சாலை பகுதி மொட்டையன் கொட்டாய் கிராம பகுதியை சேர்ந்தவர் தர்மன் இவர் பிழைப்பிற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடும்பத்தோடு கட்டிட கூலி வேலை செய்வதாவும். பொங்கல் பண்டிக்காக தங்களது வீட்டிற்க்கு வந்ததாகவும்,தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் இவரும் இவரது குடும்பத்தினரும் வெளியில் சென்ற நிலையில் மொட்டையன் கொட்டாய் பகுதியில் உள்ள இவரது வீட்டை மர்ம நபர்கள் ஜேசிபி வைத்து இடித்து தள்ளியுள்ளனர்

தகவலறிந்த தர்மன் அவரது குடும்பத்தினரும்இடித்து தரைமட்டமாக்கபட்ட வீட்டைப் பார்த்து செய்வதறியாமல் நின்று உள்ளனர்

இதுகுறித்துதர்மன் தெரிவிக்கையில் தாங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 4- வருடங்களுக்கு மேலாக குடும்பத்தோடு கட்டிட கூலித் தொழில் செய்து வருவதாகவும் சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த கிராமத்திற்கு வந்ததாகும் தெரிவித்தனர் இந்த நிலையில் இவரது உடன்பிறந்த அண்ணன் சின்னசாமி என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாகஅவரது வீட்டை உண்ணாமலை.

என்பவருக்கு விற்பனை செய்ததாகவும் தர்மன் ஊரில் இல்லாத காரணத்தினால் தர்மனின் பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் பெற்று அண்ணாமலையும் அவரது குடும்பத்தினரும் இவரது வீட்டையும்   போலியாக பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாக தெரிவித்தனர்

இதை அறிந்துகொண்ட தர்மன் கிருஷ்ணகிரி பத்திரப் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுதடங்கல் மனு அளித்ததாகவும் இவரது மனுவை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணகிரி பத்திரப்பதிவு அலுவலகம்  சம்பந்தப்பட்ட நிலத்தின் பத்திரத்தை நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தார்

இதையடுத்து

கோபமடைந்த உண்ணாமலைமற்றும் அவரது கணவர் சேர்ந்து இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் யாரும் வர மாட்டார்கள் என்கிற நோக்கில் தங்களது வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளே இருக்கிற வீட்டு உபயோக பொருட்கள் கட்டில் பீரோ போன்றவற்றை இடித்து நாசமாக்கியதாக தெரிவித்துள்ளார்

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மொட்டையன் கொட்டாய் பகுதி கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி