தண்ணீர்க்குழாய் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்
ராமநாதபுரம் பிப்-15
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் மன்ற தேர்தலில் 31வது வார்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் M.முகமது ஜஹாங்கீர் வீடு வீடாகச் சென்று தனது சின்னமான தண்ணீர்க்குழாய் சின்னத்திற்கு வாக்கு கேட்டு இவர் வாக்காளர் மத்தியில் கூறும்போது 31வது வார்டு பகுதியில் அனைத்து சமுதாய பள்ளி மாணவர்களுக்கும் இலவச டியூஷன் சென்டர் ஆறு மாதத்திற்குள் தான் வெற்றி பெற்றால் துவக்கி வைப்பதாகவும் அரசு பணிகளுக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு இலவச கவுன்சிலிங் மற்றும் அவர்களின் அரசு பணிகளுக்காக கோச்சிங் சென்டர் செல்லும்போது அவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தை தானே செலுத்தி படிக்க வைப்பதாகவும் தெரு வாரியாக புகார்பெட்டி அமைத்து வாரம் ஒருமுறை புகார் படிக்கபட்டு தீர்வு காணப்படும் என்றும், தன்னுடைய சின்னமான தண்ணீர் குழாய் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றியடையச் செய்ய பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு