ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு....? மும்முனை போட்டியில் ....வெல்வது ... யார்?

 ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு....?  மும்முனை போட்டியில் ....வெல்வது ... யார்?


நசியனூர் வார்டு 4.

சரஸ்வதிவதி அர்ச்சுனன்

ஈரோடு மாவட்டம் நசியனூர்  பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக.10- வார்டுகளிலும் , காங்.2 - வார்டுகளிலும், அதிமுக--கம்.(மா) கட்சி தலா 1 - இடங்களிலும் ,,,1 நபர் சுயேச்சையாக  வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும்   வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பதவியேற்பு விழாவும் அதன்பிறகு 4-ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வும் நடைபெற உள்ளன அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே துவக்கி விட்டனர் அதன்படி நசியனூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மூன்று  நபர்கள்  போட்டியில் இறங்கியுள்ளனர்.

 அதன்படி 4-வது வார்டு உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அர்ச்சனன் , 7-வது வார்டு உறுப்பினர் திருமதி. சவிதா சரவணன் என்பவரும்,10-வது வார்டு உறுப்பினர் திருமதி.மோகனப்பிரியா லோகேஸ்வரன் என்பவரும் தலைவர் போட்டியில் இறங்கியுள்ளனர். மூவரில் திமுக கட்சி தலைமை யாரை தேர்வு செய்கிறதோ..அவர் தலைவர் பதவிக்கு வருவார் என்று தெரிகிறது.. பதவிக்கு போட்டியிடும்  3 பேரின் சுய விபரம் பின்வருமாறு...

திருமதி. சரஸ்வதி அர்ச்சனன்.(ஆ)பள்ளி படிப்பு முடித்துள்ளார்.இவரது கணவர் அர்ஜுனன்  போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக  நிர்வாகியாக இருந்துள்ளார்.   இவர் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக  கட்சியில் பணி செய்துள்ளார். 1987- முதல் அனைத்து போராட்டங்களில்  கலந்துகொண்டுள்ளார்.

 முத்த அரசியல்வாதி என்ற முறையில் தலைவர் பதவியை தக்க வைக்க முயற்சி எடுத்துள்ளார்.

 7-வது வார்டு உறுப்பினர்

திருமதி. சவிதா சரவணன்..

 இவர் 1982 இல் பிறந்தவர். பி காம் படிப்பை முடித்துள்ளார்கணவர் பெயர் சரவணன்.

 இவரது கணவர்  சரவணன் பத்து வருடங்களாக பேரூராட்சியில் கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். காஞ்சிகோவில் பேரூராட்சியில் 2006 முதல் 2011 வரை துணைத்தலைவராக பணிபுரிந்துள்ளார்.

 20 -ஆண்டுகளாகஆண்டு காலமாக திமுக கட்சியியல் தன்னை இணைத்துக் கொண்டு  பணியாற்றியுள்ளார்.

 10-வது வார்டு உறுப்பினர் திருமதி மோகனப்பிரியா லோகேஸ்வரன்.

  1993 இல் பிறந்தவர்.

மேல்நிலை வகுப்பு முடித்துள்ளார்.

 இவரது  கணவர் ஈரோடு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக   உள்ளார். இருபது ஆண்டு காலமாக கட்சிக்காக  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.. அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்

 இந்த  3 நபர்களில் யார் நசியனூர்..பேரூராட்சியின் தலைவர் பதவியை 

அலங்கரிக்க  போகிறார்கள் என்று பொருத்திருந்து...  பார்ப்போம்..

ராஜேஷ் கண்ணா செய்தி ஆசிரியர்