மின்சார வாகனங்களுக்கு மாற்றாக வருகிறது ஹைட்ரஜன் கார்கள்

மின்சார வாகனங்களுக்கு மாற்றாக வருகிறது ஹைட்ரஜன் கார்கள்

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இத்தன பலன்களா? இதோ அதுகுறித்து அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விபரத்தை பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்கள் இருக்கின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு சிறந்த நண்பனாக செயல்படும். இதனைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டவையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. இதுவும் ஓர் எலெக்ட்ரிக் ரக வாகனம்தான். ஆனால், மின்சாரத்தை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லைக் கொண்டே அது உருவாக்குகின்றது.

இந்த செயலின்போது, அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை மின்சாரமாக மாற்றும்போது கார்பனுக்கு பதிலாக நீராவியையே அது கழிவாக வெளியேறும். இது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவேதான் ஈகோ ஃபெர்ண்ட்லி வாகனமாக இது கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட ஹைட்ரஜன் ப்யூவல் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மேலும் பல முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பக்க விளைவை ஏற்படுத்தாது:

ஹைட்ரஜன் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்றாக காட்சியளிக்கின்றது. எதிர்காலத்தின் எதிர்பார்ப்பான பூஜ்ஜியம் மாசு உமிழ்விற்கு இது நிச்சயம் உதவும். பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளி வரும் அதிகப்படியான கார்பன் உமிழ்வால் பூமி வெப்ப மயமாதல் மற்றும் காற்று மாசடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் இதுமாதிரியான எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லின் திறன்:

எரிபொருளின் பவர் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை கிராவிமெட்ரிக் -இன் வாயிலாக அளவிடப்படுகின்றது. உதாரணமாக, டீசலின் கிராவிமெட்ரிக் எனெர்ஜி டென்சிட்டி 45MJ/kg ஆகும். இதேபோல், இயற்கை வாயுவின் கிராவிமெட்ரிக் எனெர்ஜி டென்சிட்டி 55MJ/kg-ஆக இருக்கின்றது.

இவற்றைக் காட்டிலும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லின் கிராவிமெட்ரிக் எனெர்ஜி டென்சிட்டி டீசலைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம் ஆகும். தோராயமாக 120MJ/kg என அளவிடப்பட்டுள்ளது. இதேபோல், இதன் திறன் வெளிப்பாடும் சற்று அதிகம் ஆகும். ஆகையால், இதனால் கிடைக்கக் கூடிய பலனும் மும்மடங்கு அதிகமாகவே இருக்கும்.

சிறந்த மாற்று எரிபொருள்:

பசுமை இயக்கத்தை அரசு ஆதரிப்பதற்கு முக்கிய காரணமே அவை மாசுபாட்டை வெளியேற்றாது என்பதுதான். ஏற்கனவே கூறியதைப் போல ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனம் கழிவாக வெப்பம் மற்றும் தண்ணீரை (நீராவி) மட்டுமே வெளியேற்றும். ஆகையால், இது சிறந்த மாற்று எரிபொருளாக காட்சியளிக்கின்றது.

Advertisement
Advertisement

இந்த காரணத்திற்காகவே தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் ஹைட்ரஜனை பயன்படுத்த ஆலோசித்து வருகின்றது. மேலும், இதன் பயன்பாட்டினால் வெளி வரும் நீரை விண்வெளி வீரர்களுக்காக பயன்படுத்தும் முயற்சியிலும் அது களமிறங்கியிருக்கின்றது.

உலக நாடுகளை எதிர்பார்க்க வேண்டாம்:

இந்த ஒட்டுமொத்த உலகமும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒரு சில நாடுகளையே தங்களின் எரிபொருள் தேவைக்கு நம்பியிருக்கும் நிலை நிலவுகின்றது. ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை விவசாய எச்சங்களிலிருந்தே நேரடியாக உருவாக்க முடியும். இது, பிற நாடுகளை எரிபொருளுக்காக எதிர்பார்ப்பதை தவிர்க்க இது உதவும். மேலும், தன்னிச்சையாக செயல்படவும் வழி வகுக்கும்.

வாகனங்களுக்கு மட்டுமே இது பயன்படுமா?

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை வாகன துறையில் மட்டுமின்றி பிற பயன்பாட்டிற்காகவும் உபயோகித்துள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஓர் சிறந்த எனெர்ஜி உற்பத்தியாளராக விளங்குவதால் வீடுகள், வெப்பத்தை உருவாக்கக் கூடிய கருவிகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் என பலவற்றில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லின் பயன்பாடு வெறும் வாகனத்துறையே முடிந்துவிடாது. அது எதிர்காலத்தில் பரந்து விரிந்துக் காணப்படும் என யூகிக்கப்படுகின்றது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது.

பல மடங்கு வேகமாக ரீசார்ஜ் செய்ய உதவும்:

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்புவது மிக சுலபமானது. பெட்ரோல், டீசலை போல் மிக எளிதில் நிரப்பிக் கொள்ள முடியும். மேலும், ஒரு முறை முழுமையாக ஃப்யூவல் செல்லை நிரப்புவதனால் ஆயிரக் கணக்கில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். எனவேதான் இது மின்சார வாகனத்தைக் காட்டிலும் மிக சிறந்த வாகனமாக கருதப்படுகின்றது.