ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு....? இரு முனை போட்டி ......

 ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு....? இரு முனை போட்டி ......

திருமதி திவ்யா ஈஸ்வரமூர்த்தி

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் 9 வார்டுகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ( திமுக கூட்டணி கட்சி) மொத்தம் பதினோரு வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். நான்கு பேர்  சுயேச்சையாக  வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும்   வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பதவியேற்பு விழாவும் அதன்பிறகு 4-ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வும் நடைபெற உள்ளன அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே துவக்கி விட்டனர் அதன்படி காஞ்சிகோவில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு இரு நபர்கள்  போட்டியில் இறங்கியுள்ளனர். அதன்படி 2-வது வார்டு உறுப்பினர் திருமதி திவ்யா ஈஸ்வரமூர்த்தி 4-வது வார்டு உறுப்பினர் திருமதி செம்மலர் என்பவரும் போட்டியில் இறங்கியுள்ளன இருவரில் திமுக கட்சி தலைமை யாரை தேர்வு செய்கிறதோ..அவர் தலைவர் பதவிக்கு வருவார் என்று தெரிகிறது பதவிக்கு போட்டியிடும் இரண்டு பேரின் சுய விபரம் பின்வருமாறு...

திருமதி திவ்யா ஈஸ்வரமூர்த்தி இவர் பிஎஸ்சி  மற்றும்   ஆசிரியர் பயிற்சி.படிப்பு முடித்துள்ளார்.

 முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின்  மகள்.இவருடைய அப்பா ஈஸ்வரமூர்த்தி

 தலைவராகவும் , காஞ்சிகோவில் பேரூராட்சியின் 2006 முதல் 2011 வரை தலைவராகவும் பதவி வகித்துள்ளார் 40 ஆண்டு காலமாக திமுக கட்சியியல் தன்னை இணைத்துக் கொண்டு  பணியாற்றியுள்ளார்.

 செம்மலர் 4வது வார்டு

 இவர் காஞ்சிக்கோயில் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வசந்த் (எ) விஜயகுமார் என்பவரின் மனைவி  இருபது ஆண்டு காலமாக கட்சிக்காக  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்..

 இந்த இரு நபர்களில் யார் காஞ்சிகோவில் பேரூராட்சியின் தலைவர் பதவியை அலங்கரிக்க  போகிறார்கள் என்று பொருத்திருந்து...  பார்ப்போம்..

ராஜேஷ் கண்ணா.செய்தி ஆசிரியர்