கிருஷ்ணகிரியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல்வேறு பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கேசவன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன பேருரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக, நிர்வாகிகள் 700க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அரசின் பழிவாங்கும் செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன், அவைத்தலைவர் காத்தவராயன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், பையூர் ரவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே பி எம் சதீஷ் குமார், அம்சா ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல்,, துணைத் தலைவர் ராஜ்குமார், கார்த்திக் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி