நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்.

 நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் பவர் குழும தலைவர் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் ஏற்பாட்டில் பவர் குரூப் பவுண்டேசன் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டது.

அதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மதுரை கோட்ட உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார்,

நிலைய கண்காணிப்பாளர் ஐயப்பன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது. மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல், மாநில தகவல்தொழில்நூட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லாகான், இராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் சித்திக்,இளைஞரணி மாநில செயலாளர் நெய்னா முஹம்மது, STU மாவட்ட தலைவர் முகம்மது காசிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சாபிர்கான், நாசிர் முக்தார், ஏர்வாடி நகர் செயலாளர் நவ்பாதுஷா ஆலிம், நகர் பொருளாளர் அஜ்மீர்கான், பனைக்குளம் நகர் தலைவர் இக்பால், திருப்பாலைக்குடி நகர செயலாளர் மீரா உசேன்,கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் பஹருல் பயாஸ், குருவாடி அன்சாரி, மதுரை அவ்தா காதர், இராமநாதபுரம் ஆசிக் உசேன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, இராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி,  தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாஹ் கான், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகபூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களின் நெடுநாள் கோரிக்கையான தயாரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு நவாஸ்கனி எம்பி அவர்களால் பொதுமக்களுக்கு குடிநீர் உபயோகத்திற்கு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் NA. ஜெரினா பானு