நாற்காலி சின்னத்திற்கு ஓட்டு போடுங்க....!

நாற்காலி சின்னத்திற்கு ஓட்டு போடுங்க....!

ராமநாதபுரம் பிப்-12

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர்மன்ற 15வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும்             கே.ராஜா உசேன் மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். ஏற்கனவே இவர் இரண்டு முறை நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். ராமநாதபுரம் நகர் மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து பல்வேறு நன்மைகளை செய்தவர். எதிர்வரும் ராமநாதபுரம் நகர்மன்ற 15 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்     கே.ராஜா உசேனுக்கு அசைந்தாடும் நாற்காலி சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு 15வது வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நான் வெற்றி பெற்றால் நமது வார்டில் இருக்கும் ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட விதவை பெண்களுக்கு உதவித்தொகை, பெற்று தருவேன் முதலமைச்சரின் உயிர்காக்கும் மருத்துவ காப்பீடு, கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகையையும் பெற்றுத் தருவேன் ரேஷன் கடையை| மாற்றி நமது வார்டிற்கு கொண்டுவருவேன்.தெருக்களில் உள்ள பழைய தெரு விளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் எல்இடி பல்புகள் பொருத்தி தருவேன்,காவிரி கூட்டுக் குடிநீர் அனைத்து தெருக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருவேன்.  மேலும் பல வருடங்களாக சேதமடைந்தது இருக்கும் சாலைகள் சீரமைக்கப்பட்டு சரிவர பராமரிக்க ஏற்பாடு, என்று வாக்காளர் மத்தியில் தான் ஆற்ற உள்ள சேவைகளை சொல்லி வாக்குகளை சேகரித்து வருகிறார் 15-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கே.ராஜா உசேன் அவரின் சின்னம் அசைந்து ஆடும் நாற்காலி,சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி அடையச் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு