அஇஅதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!!

 அஇஅதிமுக தேர்தல் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது!

ராமநாதபுரம் பிப்- 10

ராமநாதபுரம் மாவட்டம்  அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பாசறை செயலாளரும், ராமநாதபுரம் நகர் மன்ற சேர்மன் வேட்பாளருமான பால்பாண்டின்  முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  மாவட்ட கழக செயலாளர்  முனியசாமி பேசுகையில், அதிமுக நிர்வாகிகளும் ராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களும் தொண்டர்களும் ஒன்றிணைந்து தேர்தல் வேலையை பார்க்க வேண்டும், ராமநாதபுரம் நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் இதில் அனைத்து தொண்டர்களும் ஒன்றுபட்டு உழைத்து. ராமநாதபுரம் நகர் அ.இ.அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர்  பேசினார்.இதில் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஆர்.ஜி.ரெத்தினம், சுவாமிநாதன்  ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்,

மண்டபம் மருதுபாண்டி, T.G.S.ஜானகிராமன்,    IT.wing மாவட்ட செயலாளர் சரவணன், மற்றும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்கள் மாரியப்பன், ஜெயகார்த்தி, சைனா பாஸ்கரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு