6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

 6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

திருவண்ணாமலை: தடையில்லா சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டான்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் திலோக் சந்துரு, 35. இவருக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு, தடையில்லா சான்று கேட்டு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

சான்று வழங்க, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், சுந்தர்ராஜன், 54, என்பவன், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டான். பேரத்துக்கு பின், 6,000 ரூபாய் தருவதாக, திலோக் சந்துரு கூறினார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகாரளித்தார்.

போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய, 6,000 ரூபாயை, சுந்தர்ராஜனிடம், திலோக் சந்துரு கொடுத்தார். அதை, சுந்தர்ராஜன் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக கைது செய்தனர்.