ராமநாதபுரம் நகர் மன்ற தேர்தலில்5வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் வெற்றி

ராமநாதபுரம் நகர் மன்ற  தேர்தலில்5வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜாராம் பாண்டியன் என்ற கோபால்  வெற்றி

ராமநாதபுரம் பிப்-23

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில்5வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் 

ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்,  அவர் மொத்த வாக்குகளில் 394 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றியடைந்தார். அவருக்கு வார்டில் உள்ள பொதுமக்கள் வாக்காளப் பெருமக்கள் சால்வை, மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனையடுத்து இரண்டாவது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முத்துராமலிங்கம்மொத்த வாக்குகளில் 

572வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் மகாலட்சுமியை தோற்கடித்து அமோக வெற்றியடைந்தார். வாக்களித்த வாக்காள  பெருமக்களுக்கு, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று  தனது நன்றிகளை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு