15வது வார்டு வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!
ராமநாதபுரம் பிப்-16
நடைபெற உள்ள ராமநாதபுரம் 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும். கே.ராஜா உசேன் மூன்று முறை நகர் மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ராமநாதபுரம் நகர் மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர். தனது வார்டில் உள்ள வீடுகளுக்குச் சென்று தனது சின்னமான அசைந்தாடும் நாற்காலி சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது வார்டில் உள்ளவர்கள் சால்வை அணிவித்து அமோக வெற்றிபெற வாழ்த்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு