ராமநாதபுரம் 12வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் 12வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் பிப்-10

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சி 12வது வார்டில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கமலக்கண்ணன் என்ற ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது வார்டில் மக்களுக்கு செய்த சேவைகளை கூறி ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பொதுவாக தேர்தலில் போட்டியிடுவோர் தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் எனக் கூறி தான் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் ராமநாதபுரம் நகராட்சியில் 12வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கமலக்கண்ணன் என்ற ஸ்டாலின் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே வார்டிற்கு தேவையான பல்வேறு பணிகளை தனது சொந்த முயற்சியில் போராடி பெற்றுக் கொடுத்துள்ளார். தற்போது தான், இதுவரை 12 வது வார்டில் மக்களுக்கு செய்த சேவையை எடுத்துக்கூறி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என நூதனமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட 12வது வார்டு திமுக வேட்பாளர்கள் கமலக்கண்ணன் என்ற ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

ராமநாதபுரம் நகராட்சி 12வது வார்டில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்  சாலைகள் சரிவர போடாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இது குறித்து நான் போராட்டம் நடத்தி நகராட்சி அதிகாரிகளை அழைத்து வந்து சாலையின் நிலைகளை காண்பித்து சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்தேன். அதேபோல் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது. எனது முயற்சியில் டேங்கர் லாரிகளை கொண்டு வந்து வார்டு மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க வழிவகை செய்தேன். பாதாள சாக்கடை திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளால் கழிவுநீர் ரோட்டில் ஓடும் அவலம் ஏற்பட்டது இதை நகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பாதாள சாக்கடை பணியை செம்மை படுத்தினேன்.                ஏவிஎம் ஸ்கூல் பகுதியில் பல மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருந்தது. இதற்கு தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் கூறி வந்து உடனடியாக தெரு விளக்கு அமைத்து கொடுத்தேன். முத்துராமலிங்கம் சுவாமி கோயில் தெருவில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க சிலரின் உதவியுடன் எனது முயற்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்தி உள்ளேன். வெற்றி பெற்று வந்தவுடன் முதல் பணியாக லெட்சுமிபுரம் 

ஊரணி குடலைகாரன் ஊரணி மராமத்து மேற்கொண்டு அதனை சுற்றிலும் நடைபாதையுடன் கூடிய பார்க் வசதி ஏற்படுத்தி தருவேன். நான் 12வது வார்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வந்ததை கூறினாலே மக்கள் தாமாக முன்வந்து எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை செய்ததை கூறி வாக்குகள் கேட்டு வருகிறேன், அனைத்து தரப்பினரும் என்னை வரவேற்று வெற்றி உங்களுக்குத்தான் என அன்போடு கூறி வருகின்றனர். எனக்கு இந்த மக்கள் பணி வாய்ப்பை வழங்கிய தமிழக முதலமைச்சர் மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் வெற்றிக்கனியை அவர்களிடம் சமர்ப்பிப்பேன் என உறுதி கூறுகிறேன்.இவ்வாறு கூறினார்.உடன் சமூக சேவகர் குணா இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு