அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் – அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்.சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் உள்ள எம்.எஸ்.மதன் கலையரங்கத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
சின்ன கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை பாண்டியன் தலைமை வகித்தார், நடுவக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.எஸ்.எம்.முத்துப் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பின்னர் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்…
இதன் தலைவராக சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் எம்.விசுவாசம், செயலாளராக நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சிவ ஆனந்த், துணைத் தலைவராக பெரிய கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பிச்சைப்பாண்டி, இணைச் செயலாளராக குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பி.வெள்ளத்துரை, துணை செயலாளராக மருதங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பேச்சிமுத்து (எ) தங்கத்துரை, பொருளாளராக பட்டாடைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கனகவேல், சட்ட ஆலோசகராக ஓய்வுபெற்ற பி.டி.ஓ. எஸ்.கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் வடக்கு பனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி யேசுதாஸ், குருக்கள்பட்டி (மகேஷ்), மேலநீலிதநல்லூர் (பொன்னம்மாள்), சேர்ந்தமரம் (செண்பககனி), உசிலங்குளம் (கனகலட்சுமி), கோ. மருதப்பபுரம் (வீரம்மாள்), மகேந்திரவாடி (செல்வி), மலையன்குளம் (மாரியம்மாள்), கீழநீலிதநல்லூர் (கோதையம்மாள்), ஈச்சந்தா (கருப்பசாமி), இலந்தைக்குளம் (சுரேஷ் ஜெயலட்சுமி), வெள்ளாளன்குளம் (ஜெயகண்ணன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர் வென்றிலிங்கபுரம் மதன் சுப்பிரமணியன் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். வீரசிகாமணி ஊராட்சி மன்றத் தலைவர் அரசன் நன்றி கூறினார்.
P. Rajesh. News Editor.