ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓமைக்ரான் தொற்று கிடையாது,மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் குமரகுருபரன் தகவல்!
ராமநாதபுரம் ஜன-08
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏழு வகைப்படுத்துதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வகைப்படுத்துதல் மையத்தில் நோயாளிகள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப வீட்டு தனிமைப்படுத்துதல், பாதுகாப்பு மையம் மற்றும் மருத்துவமனை எங்கு அனுமதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடம் தற்போது மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு மையம் 7 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது அதில் மூன்று தயார் நிலையில் உள்ளது. (1)சேதுபதி கலைக்கல்லூரி, (2) குயவன்குடி பயிற்சி மையம்,
(3)பரமக்குடி அரசு கலைக்கல்லூரி இவை மூன்றும் தயார் நிலையில் உள்ளது.தினமும் 650 எண்ணக்கை கோவிட் பரிசோதனை செய்யப்படுகிறது. மூன்று நோயாளிகளுக்கு மேல் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படும். ஓமைக்கிரானைத் தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம் 2 டோஸ்
தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.நோயை கட்டுப்படுத்திட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.பொது இடங்களில் கூட்டமாகக் கூடக் கூடாது.இதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் 27 குழுக்களை நியமித்துள்ளார் என்று ராமநாதபுரம் மாவட்ட இணை இயக்குனர்- நலப்பணிகள் மரு.குமரகுருபரன் நமது நிருபரிடம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு