கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா .
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெங்களூர் சாலையில் உள்ள திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகவனம். வெற்றிச்செல்வன். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சமத்துவ பொங்கல் விழாவில் சிஎஸ்ஐ மதபோதகர் டேனியல்சக்கரவர்த்திகிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப்.மகளிர் அணி பொறுப்பாளர் பரீதாநவாப். தமிழன் டிவி துரை என்கின்ற துரைசாமி. பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் தர்மன் மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி