மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் இளம் சாதனையாளருக்கு விருது வழங்கி பாராட்டு!

மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் இளம் சாதனையாளருக்கு விருது வழங்கி பாராட்டு!


ராமநாதபுரம் ஜன- 28


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு!!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான் அவருடைய மகன் எஸ்.எஸ்.ஐ. இன்ஷாப்முகமது என்பவர் கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் 2022 ரெக்கார்ட் புக் ஆப் இந்தியாவில் FLOATING ON WATER ல்சாதனை புரிந்துள்ள மாணவனை பாராட்டும் வகையில் அவருக்கு கபீர் சாகர் விருதுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, விளையாட்டு துறையில் சிறந்த இளம் சாதனையாளர் விருது குடியரசு தினமான 26.01.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு