மாணவர்களின் கல்வியை பாழ்படுத்தும் தமிழக அரசின் திட்டம் என்ன....?

 மாணவர்களின் கல்வியை பாழ்படுத்தும் தமிழக அரசின் திட்டம் என்ன....?


 இது கொரனாவிற்காக விடுமுறை விட்டது போல்  தெரியவில்லை. இது வீடு தேடி கல்வி திட்டம் மூலம்.நம்மிடம் இருக்கும் குழந்தைகளை முற்றிலுமாக நம்மை செயல்படவிடாமல் தடுத்து அரசு பள்ளியில் சேர்க்கும் திட்டமாகத்தான் தெரிகிறது. 

        ➡️Lkg ukg மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா என்று அடிக்கடி போனில் ஆய்வு செய்யும் Beo சார் ,பாலர் பள்ளி மழலைகளை அனுமதிப்பது ஏன். வீடு தேடி கல்வி திட்டம் ஒன்றும் வீட்டுக்கு வீடு போக  வில்லையே ஒரு பெரிய ஊருக்கு ஒரு பள்ளி இருந்தது. தற்பொழுது இரு இடங்களில் அல்லது மூன்று இடங்களில் உள்ளது. குழந்தைகள்  என்னவோ ஒரு இடத்தில் தானே கூடுகிறார்கள். 

       ➡️இதனை 100000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை  வைத்தே செயல்படுத்தினால் பள்ளியில் எடுத்த பாடத்தின் தொடர்ச்சியாக இருக்குமே. தன்னார்வலர்களுக்கு பயிர்ச்சி அளித்திருந்தாலும் பள்ளியில் அன்றைய தினத்தில் எடுத்த பாடத்திற்கு சம்பந்தமில்லா பாடல் விளையாட்டு என்று நேரத்தை வீனாக்குகிறார்கள் .

        ➡️குழந்தைகள் 2 வருடமாக பள்ளிக்கு வராமல் ஒழுக்கமின்றி ,எழுத்தறிவு படிக்கும் திறன், கணித அறிவு எதுவும் இன்றி மந்தமாக இருக்கும் இந்த சூழலில் அரசு அவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதை தவிர்த்து.இதிலும் அரசியல் நோக்குடன் தங்கள் ஆட்சியில் அரசு பள்ளியில் 5 ,6 லட்சம் மாணவர்களை சேர்த்து சாதனை படைத்தோம்.சாதனை பட்டியலுக்கு தயாராகிறது. 

     ➡️  இந்த தலத்தில் அரசியல் பேசுவது தவறு என்றாலும் ,எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் நம்மை வேருடன் சாய்ப்பது தான்  அவர்களின் முதல் திட்டமாக உள்ளது. எத்தனை பேர்  ஆட்சி அமைத்தாலும் இன்று தமிழகம் கல்வி தகுதியில்  எந்த துறையாகட்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் 100000 ,150000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களால் இல்லை. 

     ➡️5000,6000 வாங்கும் நாம் ஆசிரியர்களின் உணவின்றி ஓய்வின்றி உழைக்கும்  உழைப்பினாலும் வட்டிக்கு வாங்கி ஒரு சேவை மனப்பான்மையுடன் குடும்பத்தோடு உழைத்து உண்ணும்போதும் உறங்கும் போதும் ஒரே பள்ளி சிந்தனையுடனையே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கோமே நம் தியாகத்தினால்தான்.

           ➡️ இதில் என்ன நாம் சம்பாதித்துவிட்டோம், ரத்தகொதிப்பை தவிர.

       ➡️ அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு மருத்துவமனையும் ஒழுங்காக செயல்பட்டால் ஏன் மக்கள் தனியாரை தேடி செல்கிறார்கள். 

       ➡️  தரமான கல்வி இல்லை என்றால் வாழ்க்கை போய்டும் நல்ல வைத்தியம் இல்லை என்றால் உயிர் போய்டும் என்ற பயத்தில் தானே.

        ➡️தப்பு எங்கு உள்ளதோ அதை சரி செய்வதை விட்டு எது சரியாக செயல்படுகிறதோ அதை அழிப்பதினால் அழிவு என்னவோ நம் இளைய சமுதாயத்திற்கே! 

                _ இது தனியார் பள்ளிகளின் மனக்குமுறலின் வெளிப்பாடு 😥