தாலிக்கு தங்கம் வழங்கும் விழா
ராமநாதபுரம் ஜன-25
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவை ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் S.புல்லாணி, Ex ஒன்றிய செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஆனந்த்,மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வட்டார தலைவர் சேதுபாண்டியன், செய்தி தொடர்பாளர் கெளசி, திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வழிநெடுகிலும மலர்மாலைகள் அணிவித்தும், சால்வை அணிவித்தும் இந்த சிறப்பான ஏற்பாட்டினை பெருந்தலைவர் S.புல்லாணி செய்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு