திமுகவை மக்கள் ஒதுக்கி விட்டனர் - நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் - கே.பி.முனுசாமி பேட்டி....
ஏழு மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை - திமுகவை மக்கள் ஒதுக்கி விட்டனர் - நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும் என்று கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கேபி முனுசாமி ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார் இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகி நிலையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை நிதி ஆதாரத்தை பெருக்க திராணி இல்லாத அரசாக இந்த அரசு உள்ளது. இதே கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் நிதி ஆதாரங்கள் இல்லாத போதும் திட்டங்களை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுத்தினார்.
கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை இருக்கும் திட்டங்களையும் செயல்படுத்த வில்லை புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை இந்த அரசு தோல்வி அடைய போகும் நிலையில் உள்ளது. மக்களிடையே தோல்வி எண்ணத்தை மறைக்க திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம் வெற்றி பெறுவோம்.
. நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் புதிய திமுக அரசை நம்பி மக்கள் வாக்களித்தனர் ஆனால் 7 மாத ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பலனும் இந்த ஆட்சியால் கிடைக்கவில்லை. அதன் வெளிப்பாடாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற இடங்களில் தற்போது மனுக்களை வாங்கி வருகின்றனர்.
ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு எப்படி மனுக்களை பெற்றாரோ அதே போல் தற்போது மனுக்கள் வாங்குகின்றனர். இந்த நடவடிக்கை மக்கள் திமுகவை ஒதுக்கி விட்டனர் என்பதை காட்டுகிறது. அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம் மகிழ்ச்சி அளிக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்கிறோம் கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பற்றி கவலைப்படுவதில்லை ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பி தேவைப்பட்டால் தனித்து அதிமுக போட்டியிடும். அதிமுகவின் உட்கட்சி தேர்தல் எந்த விதமான அழுத்தமின்றி ஒற்றுமையுடன் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தோடு தேர்தலை நடத்தி வெற்றிகரமாக முடித்துள்ளோம் விரைவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.