செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் 73 வது குடியரசு தினவிழா!!!

 செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் 73 வது குடியரசு தினவிழா!

ராமநாதபுரம் ஜன- 27

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 73 வது இந்திய குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. செய்யதம்மாள்பொறியியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் மருத்துவர் சின்னத்துரை அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தலைமையாசிரியர் காஜா முகைதீன் குடியரசு தினத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார்கள் இதில்செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி12ஆம் வகுப்பு மாணவி நிலோபர் நிஷா, பனிரெண்டாம் வகுப்பு மாணவன் முஹம்மது அஸ்மத்,

பத்தாம் வகுப்பு மாணவி பூமிகா ஆகியோர் குடியரசு தினத்தை பற்றி பேசியது அனைவரின் மனதையும் கவர்ந்தது முன்னதாக தமிழ்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் பள்ளி  மாணவிகளால் பாடப்பட்டது.உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன் நன்றியுரை கூற இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு