சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 123 வது நினைவு தினம்
ராமநாதபுரம் ஜன-24
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயில் அருகில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 123 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அவரது திருஉருவச்சிலைக்கு இளையராஜா பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி மாலை அணிவித்து, மலர்தூவி வணங்கினார். ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் இளையராஜா பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி, அதிமுக ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன்,ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசின் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெய கார்த்திக்,உள்ளிட்ட சேதுபதியின் வாரிசுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை அடுத்து அரண்மனையில் உள்ள ராமலிங்க விலாசத்தில் சுதந்திர போராட்ட தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் திருவுருவப் படத்திற்கு ராணி இலக்குமி நாச்சியார் தலைமையில் தீபாராதனை காட்டப்பட்டது.. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ராணி லக்குமி நாச்சியார் பேசும்போது:- விடுபட்டுப் போன வாரிசுதாரர்களுக்கு பென்ஷனை தமிழக அரசு உடனடியாக வழங்க கோரியும், ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் நுழைவாயில் அருகில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களுக்கு மணிமண்டபம் தமிழக அரசு கட்டித் தரவும் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு