ராமநாதபுரம் நகர் 1வது வார்டு திமுக சார்பில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் நகர் 1வது வார்டு திமுக சார்பில் முப்பெரும் விழா


 ராமநாதபுரம் ஜன-10

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் 1வது வார்டு திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று மாலை நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்கள் பிறந்தநாள் விழா, மற்றும் பொங்கல் விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகிய முப்பெரும் விழாவாக இன்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு பொங்கல் பானையை பரிசாக வழங்கி சிறப்பு செய்தார். இதனை அடுத்து 1வது வார்டு திமுக செயலாளர் கணேச பாண்டியனிடம் உறுப்பினர் சேர்ப்பு பாரத்தை வழங்கினார். இதில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் அகமது தம்பி, குணசேகரன், திமுக நகர் செயலாளர்கள் (வடக்கு)கார்மேகம், பிரவீன் தங்கம் (தெற்கு) மற்றும் திமுக முக்கிய பிரமுகர் மூவேந்தன் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை 1வது வார்டு திமுக செயலாளர் கணேச பாண்டியன் செய்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு