PAN Card போலியா, உண்மையா என கண்டறிவது எப்படி? வருமான வரித்துறையின் செயலி அறிமுகம்!

 PAN Card போலியா, உண்மையா என கண்டறிவது எப்படி? வருமான வரித்துறையின் செயலி அறிமுகம்!

தற்போது அநேக இடங்களில் போலி பான் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை கண்டறிய ஒரு செயலியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலின் பயன்பாட்டை குறித்து விரிவாக காண்போம்.

PAN QR Code Reader:

தற்போது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் போலியான பான் கார்டுகள் அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது. அத்துடன் இணைய தளங்களில் போலி இணைப்புகள், பேமெண்ட் செயலிகள் உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பான் கார்டின் QR கோடை வருமான வரித்தறை வழங்கி வருகிறது. இந்த PAN கார்டு போலியானதா அல்லது உண்மையானதா என்பதை QR கோடுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும் PAN கார்டு போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிய 12 மெகாபிக்சல் கேமரா உள்ள ஒரு ஸ்மார்ட்போன் போதுமானது.

இதனை கண்டறிய வருமான வரித்துறை தனித்துவமான ஒரு செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய PAN QR Code Reader என்று ஸ்மார்ட்போனில், பிளே ஸ்டோருக்கு சென்று தேட வேண்டும். அதில் பல ஆப்கள் வரும், அதில் “NSDL e-Governance Infrastructure Limited” என்ற டெவலப்பர் பெயர் காட்டும் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் அதற்குள் இருக்கும் கேமரா வியூ பைண்டரில் பச்சை நிறத்தில் பிளஸ் போன்ற கிராபிக் இருக்கும். ப்ளஸ் கிராபிக் மீது ஸ்மார்ட்போன் கேமராவின் போகஸ் இருக்க வேண்டும். அதாவது புகைப்படம் எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி கேமராவை அமைப்பது போல் வைக்க வேண்டும்.

அதையடுத்து PAN அட்டையை நோக்கி கேமராவை வைக்க வேண்டும். இப்பொழுது ப்ளஸ் வடிவ கிராகபிக் பான் கார்டின் QR கோடு நடுவில் இருக்க வேண்டும். வியூ பைண்டரில் QR கோடு தெளிவாகத் தெரிய வேண்டும். அடுத்ததாக QR கோடை தெளிவாகப் பார்க்க முடிந்தால் ஒரு Beep ஒலி கேட்கும். அத்துடன் மொபைல் வைப்ரேட் ஆகும். அதன் பின்னர் வெள்ளை பின்னணியில் PAN கார்டின் விவரங்கள் காண்பிக்கப்படும். மேலும் ஸ்கேன் செய்த அசல் பான் கார்டின் விவரங்களும் காண்பிக்கப்படும். பான் கார்டின் விவரங்களும் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இரண்டு PAN கார்டு விவரங்கள் வேறுபட்டால் PAN கார்டு போலியானது என்று கருதப்படும். இவ்வாறு வேறு PAN கார்டு விவரங்கள் தோன்றினால் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.