பாம்பன் நான்கு வழிச்சாலையை மாற்றியமைக்க கோரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

 பாம்பன் நான்கு வழிச்சாலையை மாற்றியமைக்க கோரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு


ராமநாதபுரம் டிச- 15

ஏற்கனவே மக்களவையில் இது குறித்து உரையாற்றியிருந்த நிலையில் இன்று ஒன்றிய அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தல்.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நான்கு வழிச்சாலையை குடியிருப்புகள் பாதிப்படையாத வண்ணம் மாற்றி அமைக்க கோரி மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களை சந்தித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி நேரில் சந்தித்து வலியுறுத்தல்.

இதுகுறித்து அவர் கூறும்போது,

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வழியாக புதிதாக அமைக்கப்படும் நான்குவழி சாலை பாலத்தால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

400க்கும் மேற்பட்ட வீடுகள் இதன் மூலம் பாதிக்கப்படும்.

எனவே திட்டத்தை மாற்று வழியாக மாற்றி அமைக்க கோரி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 குடியிருப்புகளை பாதிக்காத வகையில் நான்கு வழி சாலை பாலத்தை மாற்று வழியில் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மாண்புமிகு நிதின்கட்கரி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஏற்கனவே இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றியிருந்தேன்.அதனை தொடர்ந்து இன்று ஒன்றிய அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்  மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு