பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் டிச-06 

ராமநாதபுரம்(கிழக்கு) மாவட்டம் கீழக்கரையில் இன்று(06/12/2021) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி கண்டன உரையாற்றினார், முன்னதாக கீழக்கரை(மேற்கு) நகர செயலாளர் அஷ்ரஃப் வரவேற்புரையாற்றினார், கீழக்கரை(மேற்கு) நகர் தலைவர் மற்றும் தொகுதி பொருளாளர் சகுபர் சாதிக் கருத்துரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டனர். இந்த ஏற்பாட்டினை ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு