மர்ஹபா ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் பிரியாணி மற்றும் இதர உணவுகள் ரெஸ்டாரண்ட்
டிச- 21
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பழைய செக்போஸ்ட் அருகில்மர்ஹபா ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் பிரியாணி மற்றும் இதர உணவுகள் ரெஸ்டாரண்ட் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சுவையான சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் முதன்முறையாக குழி மந்தி என்ற உணவு அறிமுகம் செய்து வழங்கப்பட்டது. மற்றும் அயல்நாட்டு பிரயாணிகளுக்குத் தகுந்த சுவையான உணவு தயாரித்து வழங்கும் சிறந்த உணவு ரெஸ்டாரெண்ட். பொதுமக்களும் உணவுப் பிரியர்களும் மிக அதிகமாக கடை திறப்பு விழா அன்று வாங்கிச் சென்றார்கள். திறப்பு விழாவிற்கு வருகை தந்த ராமநாதபுரம் பீமாஸ் ஹோட்டல் உரிமையாளர் கலந்துகொண்டு வாழ்த்தினார். பொதுமக்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் ஆகியோருக்கு பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ் உரிமையாளரும் மர்ஹபா ரெஸ்ட்டாரெண்ட்
உரிமையாளருமான அஜீஸ் காக்கா அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு